Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2 ஆயிரம் ரூபாய் கடனுக்காக வாலிபர் துள்ள துடிக்க கொலை! – டெல்லியில் அதிர்ச்சி!

Advertiesment
2 ஆயிரம் ரூபாய் கடனுக்காக வாலிபர் துள்ள துடிக்க கொலை! – டெல்லியில் அதிர்ச்சி!

Prasanth Karthick

, வியாழன், 11 ஜனவரி 2024 (17:07 IST)
டெல்லியில் இளைஞர் ஒருவர் ரூ.2 ஆயிரம் கடன் வாங்கி விட்டு திரும்ப தராததால் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



தெற்கு டெல்லியில் பதர்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சாலை ஒன்றில் இரவு 2 மணி அளவில் 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று இளைஞர் ஒருவரை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியதுடன், அவரது காலை பிடித்து உடலை இழுத்து செல்லவும் முயன்றுள்ளனர்.

அந்த சமயம் அப்பகுதியில் ரோந்து போலீஸார் வருவதை கண்டதும் பயந்து ஓடியுள்ளனர். அவர்களை சில போலீஸார் துரத்தி செல்ல அடிபட்டு கிடந்த இளைஞரை போலீஸார் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்திருந்தார்.


அவரை அந்த கும்பல் 25 இடங்களில் கத்தியால் குத்தியுள்ளனர். அந்த கும்பலை போலீஸார் விரட்டி சென்ற நிலையில் துக்ளாபாத் மெட்ரோ ரயில் நிலையம் அருகே 3 பேரை பிடித்துள்ளனர். அதில் இருவர் 18 வயதிற்கு குறைவான சிறுவர்கள். அவர்களை விசாரித்து மீத 2 பேரையும் போலீஸார் பிடித்தனர்.

விசாரணையில், 5 பேர் கொண்ட கும்பலால் கொல்லப்பட்டவர் கவுதம்புரியை சேர்ந்த கவுரவ் என தெரிய வந்துள்ளது. கவுரவ் இந்த கும்பலை சேர்ந்த ஒருவரிடம் ரூ.2 ஆயிரம் கடனாக வாங்கியுள்ளார். அதை திரும்ப தருவதில் ஏற்பட்ட தகராறில் இந்த கும்பல் அவரை கொடூரமாக கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துணை முதல்வர் ஆகிறார் அமைச்சர் உதயநிதி? விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!!