Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 15 April 2025
webdunia

20 வயது மாணவியை திருமணம் செய்த 65 வயது தலைமை ஆசிரியர்

Advertiesment
ஆசிரியர்
, புதன், 26 செப்டம்பர் 2018 (07:44 IST)
பஞ்சாப்பில் 20 வயது மாணவி ஒருவரை 65 வயது தலைமை ஆசிரியர் திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் அபோகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயகிருஷ்ணன்(65). இவர் ஒரு ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். இவரது மனைவி இறந்துவிட்ட நிலையில் இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த மகத்(20) என்ற மாணவி டியூசன் படித்து வந்தார். ஜெயக்கிருஷ்ணன் மாணவிக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளார். இதனால் மாணவிக்கு ஜெயக்கிருஷ்ணன் மீது ஈர்ப்பு வந்துள்ளது. நாளடைவில் அது காதலாக மாறியது.
 
இந்நிலையில் சபீபத்தில் அவர்கள் இருவருமே எஸ்கேப் ஆகிவிட்டனர். இதனால் அதிர்ந்துபோன மாணவியின் பெற்றோர், ஜெயகிருஷ்ணன் தனது மகளை கடத்திவிட்டதாக போலீஸாரிடம் புகார் அளித்தார். போலீஸார் பல்வேறு பகுதியில் இவர்களை தேடி வந்த நிலையில் அவர்கள் ராமேஸ்வரத்தில் சுற்றித்திரிந்தது தெரியவந்தது.
 
இதனையடுத்து ராமேஸ்வரம் போலீஸார் இருவரையும் கண்டுபிடித்தனர். பஞ்சாப் போலீஸாரோடு மாணவியின் தந்தை ராமேஸ்வரத்திற்கு வந்தார். அவர்களை பிடித்து விசாரித்ததில் இருவரும் திருமணம் செய்து கொண்டதாய் கூறினர். இதனைக்கேட்ட மாணவியின் தந்தை பேரதிர்ச்சிக்கு ஆளாகினார். இதனையடுத்து அவர்கள் இருவரும் பஞ்சாப் அழைத்துச் செல்லப்பட்டார்கள். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுயமரியாதை இழந்த அடிவருடி: யாரை தாக்குகிறார் உதயநிதி?