அடுத்த 2024 ஆண்டு முதல் வந்தே பாரத் ரயில்களில் படுக்கை வசதிகள் இடம்பெற உள்ள நிலையில் அதுகுறித்த பர்ஸ்ட் லுக் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவிலேயே முழுவதுமாக தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இந்தியாவின் பல வழித்தடங்களிலும் செயல்பட்டு வருகின்றன. ஏ சி வசதி கொண்ட இந்த வந்தே பாரத் ரயில்கள் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கின்றன. பல வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் செயல்பட்டு வந்தாலும் அதில் படுக்கை வசதி இல்லை அமர்ந்திருக்கும் வசதி மட்டுமே உள்ளது. முடிந்தால் இருக்கையை பின்னால் சற்று சாய்த்து ஓய்வெடுக்கலாம். ஆனால் நீண்ட தூர பயணங்களுக்கு இது உகந்ததாக இல்லை என பயணிகளிடையே அதிருப்தி உள்ளது.
இந்நிலையில்தான் அடுத்த ஆண்டு படுக்கை வசதியுடன் கூடிய பெட்டிகள் வந்தே பாரத் ரயிலில் இணைக்கப்பட உள்ளன. அந்த பெட்டிகளின் வசதிகள் எப்படி இருக்கும் என்ற ஒரு ஃபர்ஸ்ட் லுக் படங்களை ரயில்வே வெளியிட்டுள்ளது. மிகவும் ஆடம்பரமாக காணப்படும் அந்த ரயில் பெட்டிகளின் படங்கள் வைரலாகி வருகிறது.