Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடன் வாங்கியவர்கள் திரும்ப தரலை..! ஜவுளி வியாபாரி கடலில் குதித்து தற்கொலை!

Advertiesment
கடன் வாங்கியவர்கள் திரும்ப தரலை..! ஜவுளி வியாபாரி கடலில் குதித்து தற்கொலை!
, புதன், 4 அக்டோபர் 2023 (08:53 IST)
தன்னிடம் கடன் வாங்கியவர்கள் கடனை திரும்பத் தராததால் மனமுடைந்த ஜவுளி வியாபாரி கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருபவர் சிவமுனி. இவர் ஜவுளி தொழில் மட்டும் அல்லாமல் சீட் பிடிக்கும் தொழிலும் நடத்தி வந்தார் அதில் தனக்கு தெரிந்தவர்களுக்கு ₹20,00,000 வரை கடன் கொடுத்துள்ளார் ஆனால் அவரிடம் கடன் பெற்றவர்கள் நீண்ட. ஆகியும் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வந்துள்ளனர்.

அதேசமயம் சிவமுனிக்கு கடன் கொடுத்தவர்கள் கடனை திரும்ப கேட்டு அழுத்தம் கொடுத்துள்ளனர். இதனால் விரக்தி அடைந்த சிவமுனி தனது ஜவுளி கடையில் கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டு கீழக்கரை துறைமுகப் பகுதியில் உள்ள கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். கரை ஒதுங்கி அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தற்கொலைக்கு தொடர்பான நபர்களை கைதுசெய்து விசாரிக்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் ஒரு கை விடுத்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேர்தலில் யாரோடு கூட்டணி? இன்று ஓபிஎஸ் ஆலோசனை!