Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இவ்ளோ தாங்க வாழ்க்கை - சுட்டிக்காட்டும் ஒரு மரண சம்பவம்

இவ்ளோ தாங்க வாழ்க்கை - சுட்டிக்காட்டும் ஒரு மரண சம்பவம்
, திங்கள், 9 ஜூலை 2018 (16:21 IST)
முதியவர் ஒருவர் நடனம் ஆடிக்கொண்டிருக்கும் போதே மாரடைப்பு ஏற்பட்டு மரணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனிதர்கள் வாழும் காலத்தில் ஏகப்பட்ட போட்டிகள், பொறாமைகளோடு வாழ்கின்றனர். அவனுக்கு அவ்வளவு சொத்து இருக்கிறது, அந்த கார் வைத்திருக்கிறான், இத்தனை சவரன் நகை வைத்திருக்கிறான், என ஒருவரோடு ஒப்பிட்டுக் கொண்டு அதனை அடைய ரேஸ் குதிரை போல ஓடுகிறான்.
 
ஏன் பலருக்கு வாழ்க்கை என்பது சிறிது, இதில் எதுவுமே நிலையல்ல, எவ்வளவு தான் சொத்து இருந்தாலும் போகும்போது நாம் எதையும் எடுத்து கொண்டு போகப் போவதில்லை அதேபோல் ஒருவருக்கு மரணம் என்பது சொல்லிவிட்டு வராது என்பதும் பலருக்கு தெரிவதில்லை. இதனை புரிந்து கொள்ளாமலே பலர் பொன், பொருளை தேடி ஓடுகின்றனர். சொத்து நிலையானது அல்ல. எப்பொழுதுவும் எது வேண்டுமானாலும் நடைபெறலாம் என்பதனை இந்த முதியவரின் மரணம் எடுத்துக்காட்டியுள்ளது.
 
திருமண நிகழ்வில் முதியவர் ஒருவர் சந்தோஷமாக டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தார். கவலையை மறந்து சந்தோஷமாக ஆடிக்கொண்டிருந்த அவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டார். இவ்வளவு தான் வாழ்க்கை. இதனை புரிந்து கொள்ளாமல் பலர் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாக்குறுதிகளை நிறைவேற்ற இன்னும் 5 ஆண்டுகள் தேவை: பாஜகவை தாக்கும் சு.சுவாமி!