Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாரடைப்பு ஏன் ஏற்படுகின்றன? ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?

மாரடைப்பு ஏன் ஏற்படுகின்றன? ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?
இதய தசைகளுக்கும் தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்துச் செல்ல மூன்று முக்கிய ரத்தக்குழாய்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் இதயத்தின் வெவ்வேறு பாகங்களுக்கு ஆக்சிஜன் கலந்த ரத்தத்தை எடுத்து செல்கின்றன. இந்த ரத்தக்குழாய்களின் ரத்த ஓட்டத்திற்கு தடையாக முதலில் சிறியதாக  தடைக்கற்கள் போல அடைப்புகள் ஏற்படுகின்றன.
சில காரணங்களால் இத்தடை கற்கள் பெரிதாகி உடைந்து, அதன்மேல் ரத்தம் உறைந்து ரத்தக்குழாயை முழுமையாக அடைத்து  விடுகிறது.  இதனால் இந்த  இரத்தக் குளாய் மூலம் ரத்தத்தைப் பெறும் இதயத்தின் தசைப் பகுதி ஆக்ஸிஜனையும் ஊட்டச் சத்துகளும் கிடைக்கப் பெறாததால் செயலிழக்கிறது. இதுவே  மாரடைப்பு.
 
உயர் ரத்த அழுத்தம், அதிகக் கொழுப்புச் சத்து, சர்க்கரை நோய், புகைபிடித்தல், மன அழுத்தம் போன்றவற்றால்கூட ரத்த நாளத்தின் உட்சுவர் பாதிக்கப்படுகிறது.  உட்சுவர் கரடுமுரடாகி, அதன் மீது ரத்தத்தில் மிதக்கும் கொழுப்புத் திவலைகள் படிந்துகொண்டே வரும். ரத்த ஓட்டத்துக்கான பாதை குறுகலாகி, ரத்த ஓட்டம் தடைபடும். பிறகு இதய நாளத்தில் விறைப்பு அல்லது உறைகட்டி  ஏற்பட்டால், ரத்த ஓட்டம் முழுவதுமாகத் தடைபடும். இதயத் தசைக்கு ரத்த ஓட்டம்  தடைபடுவதால், அவை செயலிழக்கின்றன.
webdunia
புகைபிடித்தல், அதிகமாக உணர்ச்சிவசப்படுதல், அளவுக்கு அதிகமானக் கடின உழைப்பு போன்றவற்றால், இது ஏற்படலாம். அடைப்பு அதிகமாகும்போது, இறுக்கம்  அல்லது தீவிர மாரடைப்பு ஏற்படுகிறது.
 
கடுமையான மார்பு இறுக்கம் போன்ற வலி 15 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும். மார்பு வலியுடன் உடல் எங்கும் திடீர் வியர்வை, மூச்சுத்திணறல், வாந்தி, பலவீனம், தலைச்சுற்றல், மயக்கம், வேகமான நாடித்துடிப்பு ஆகியனவும் ஏற்படலாம். அறிகுறிகளே  இல்லாமல் மாரடைப்பு போன்றவையும் ஏற்படுவதும்  உண்டு.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேப்ஸிகம் வெஜ் ஆம்லெட் செய்ய...!