Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

30 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன கணவனை பார்த்த மனைவியின் நெகிழ்ச்சி தருணங்கள்

Advertiesment
30 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன கணவனை பார்த்த மனைவியின் நெகிழ்ச்சி தருணங்கள்
, செவ்வாய், 14 ஆகஸ்ட் 2018 (08:28 IST)
ஜெய்ப்பூரை சேர்ந்த பெண்மணி ஒருவர் 30 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தனது கணவனை பார்த்த நெகிழ்ச்சியான சம்பவத்தை கூறியுள்ளார்.
ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் கஜானந்த் சர்மா. இவரது மனைவி மக்னி தேவி. கஜானந்த் சர்மா தனது 32 வது வயதில் திடீரென காணாமல் போனார். அவரை அவரது குடும்பத்தாரும்,  உறவினர்களும் பல இடங்களில் தேடியும் கஜானந்த் எங்கும் கிடைக்கவில்லை.
 
அவரை பிரிந்து வாழ்ந்த மக்னி தேவி, கணவர் எப்பொழுது திரும்புவார் என ஏக்கத்துடன் வாழ்ந்து வந்தார். அவர்களுக்கே சமீபத்தில் தான், கஜானந்த் சர்மா பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்தது.
 
இந்நிலையில் பாகிஸ்தானின் சுதந்திர தினத்தை முன்னிட்டு  26 மீனவர்கள் உள்பட 29 கைதிகளை நல்லெண்ண அடிப்படையில் அந்நாட்டு அரசு நேற்று முன்தினம் விடுதலை செய்தது. 
 
அதில் கஜானந்த் சர்மாவும் ஒருவர். அவரை அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். கஜானந்த்தை பார்த்த அவரது மனைவி ஆனந்த கண்ணீருடன் அவரை கட்டித் தழுவினார். மேலும் எனது கணவர் கண்டிப்பாக வருவார் என எனக்கு தெரியும் என்றும் எனது பிராத்தனை வீண் போகவில்லை எனவும் நெகிழ்ச்சியுடன் பேசினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அழகிரி குறிவைப்பது எதை? கட்சியா? அறக்கட்டளையா?