Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா! துரத்தி வந்த சிங்கம் தெறித்து ஓடிய பயணிகள் – வைரல் வீடியோ!

Advertiesment
ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா! துரத்தி வந்த சிங்கம் தெறித்து ஓடிய பயணிகள் – வைரல் வீடியோ!
, வெள்ளி, 11 அக்டோபர் 2019 (18:44 IST)
கர்நாடகா உயிரியல் பூங்கா ஒன்றில் காட்டுக்குள் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தபோது சிங்கம் ஒன்று பயணிகளை வேட்டையாட துரத்தி வரும் காட்சி வைரலாக பரவி வருகிறது.

கர்நாடக மாநிலம் பல்லாரியில் உள்ளது பிரபலமான அடல் பிஹாரி வாஜ்பேயி உயிரியல் பூங்கா. இந்த பூங்காவில் காட்டிற்குள் ஜீப்பில் சென்று மிருகங்களை பார்வையிடும் சஃபாரி உலா மிகவும் பிரசித்தமானது. சில நாட்களுக்கு முன்பு ஒரு குழுவினர் காட்டிற்குள் சஃபாரி உலா சென்றிருக்கிறார்கள்.

அப்போது திடீரென பின்னால் ஒரு ஆண் சிங்கம் சரிவிலிருந்து இறங்கி ஜீப்பை நோக்கி ஓடி வந்திருக்கிறது. அதை பார்த்த பயணிகள் அலற டிரைவர் வண்டியின் வேகத்தை கூட்டியிருக்கிறார். ஆனால் மிக வேகமாக வந்த சிங்கம் கிட்டத்தட்ட ஜீப்பின் பின்பக்கத்தில் இருந்த பயணிகளை தாக்க நெருங்கிவிட்டது.

ஆனால் ஜீப்பின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் பின்வாங்கியது சிங்கம். இதனால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். சிங்கம் துரத்தி வந்ததை பயணி ஒருவர் தனது கேமராவில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மின்னொளியில் ஜொலிக்கும் மாமல்லபுரம்: சீன அதிபர் ஆச்சரியம்