Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குடிபோதையில் 3 மாத கைக் குழந்தையை அடித்துக் கொன்ற கொடூர தாய்

Advertiesment
குடிபோதையில் 3 மாத கைக் குழந்தையை அடித்துக் கொன்ற கொடூர தாய்
, செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (12:06 IST)
அசாமில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர் தனது 3 மாத கைக் குழந்தையை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலம் நாகோம் மாவட்டம் பொற்கொலா என்ற இடத்தை சேர்ந்தவர் ருப்ஜோதி. இவரது கணவர் கூலித்தொழிலாளி. இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகள் உள்ளார். கடந்த 3 மாதத்திற்கு முன்பு தம்பதியினருக்கு, ஆண் குழந்தை பிறந்துள்ளது. ருப்ஜோதிக்கு குடிப்பழக்கம் உண்டு.
 
இந்நிலையில் கடந்த 5 தினங்களுக்கு முன்னர் குடிபோதையில் இருந்திருக்கிறார்  ருப்ஜோதி. அப்போது அவருடைய 3 மாத கைக்குழந்தை அழுதுள்ளது. ருப்ஜோதி குழந்தையை சமாதானம் செய்ய முயற்சி செய்திருக்கிறார். ஆனால் குழந்தை சமாதானம் ஆகவில்லை. இதனால் ஆத்திரமுற்ற ருப்ஜோதி, பிஞ்சுக் குழந்தை என்றும் பாராமல், குழந்தையை அடித்தே கொன்று, பிணத்தை அருகிலுள்ள குட்டையில் வீசியுள்ளார்.
webdunia
இதனையடுத்து குழந்தை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நேற்று குழந்தையின் பிணம் குட்டையில் மிதந்துள்ளது. போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். 
 
ருப்ஜோதி மீது சந்தேகித்த போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் குழந்தையை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தை தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக களமிறங்கிய புதுச்சேரி; உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு