செல்போனில் பேசியபடியே ரயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்ற மணமகன் ரயில் மோதி மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் நாள் தோறும் ரயில் தண்டவாளத்தில் நடைபெறும் மரணங்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது. குறிப்பாக ரயில் தண்டவாளத்தில் செல்போன் பேசியபடி செல்வது, தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்துக் கொள்வது போன்ற பொறுப்பற்ற செயல்களில் ஈடுபட்டு பலர் உயிரை விடுகின்றனர்.
இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலம் பரெலி மாவட்டத்தின் அருகில் உள்ள நந்தோசி என்னும் ஒரு கிராமத்தில் வசிப்பவர் நரேஷ் பால்(30). இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த உமா கங்க்வார் என்ற பெண்ணுக்கும் நேற்று திருமணம் நடக்க இருந்தது. நரேஷ் பால் தனது நண்பருடன் வீட்டினருகே ரயில்வே தண்டவாளத்தில் நடந்த படி பேசிக்கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக எதிரே வந்த ரயில் நரேஷ் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் நரேஷ் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்
சம்பவ இடத்திற்கு விரைந்த ரெயில்வே போலீஸார் நரேஷின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மணநாள் அன்றே மாப்பிள்ளை இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.