இந்திய காடுகளில் வசிக்கும் அரிதினும் அரிதான தங்க புலி ஒன்றின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலகம் முழுவதும் பல்வேறு புலி இனங்கள் வாழ்ந்து வந்தாலும், இந்திய புலிகள்தான் உலக அளவில் பலராலும் மிகவும் கவனிக்கப்பட கூடிய புலிகளாக இருக்கின்றன. இந்நிலையில் வனத்துறை அதிகாரியான பர்வீன் கஸ்வான் சமீபத்தில் ஒரு புலியின் புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார்.
வங்க புலிகளை போல அடர் கருப்பு கோடுகளை கொண்டிராமல் மெல்லிய கருப்பு கோடுகளுடன் தங்க மஞ்சள் நிற ரோமங்களோடு காட்டில் புலி ஒன்று திரிவது கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த புகைப்படத்தை பதிவிட்ட கஸ்வான் “மிகவும் அரிதான் தங்க புலி கேமராவில் சிக்கியிருக்கிறது. சிலர் புலி இனங்களுக்கிடையே அரிதாக நிகழும் கலப்பினால் இதுப்போன்ற புலிகள் உருவாவதாக கூறுகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.