Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செயின் பறிப்பில் உயிரிழந்த கல்லூரி மாணவி - வடமாநில கொள்ளையன் கைது

Advertiesment
செயின் பறிப்பில் உயிரிழந்த கல்லூரி மாணவி - வடமாநில கொள்ளையன் கைது
, செவ்வாய், 31 ஜூலை 2018 (13:39 IST)
கேரளாவில் செயின் பறிப்பு முயற்சியில் கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பெரும்பாவூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரின் மகளான நிமிஷா என்ற இளம்பெண் கல்லூரியில் பி.பி.ஏ. இறுதியாண்டு படித்து வருகிறார்.
 
கல்லூரி விடுமுறை என்பதனால் நிமிஷா வீட்டில் இருந்துள்ளார். அப்போது அவரது வீட்டில் நுழைந்த வடமாநில கொள்ளையன் ஒருவன், நிமிஷா அணிந்திருந்த தங்கச் செயினை பறிக்க முயன்றுள்ளான். நிமிஷா செயினை பறிக்க விடாமல் இறுக்க பிடித்துக்கொண்டார். 
 
ஒருகட்டத்தில் கொள்ளையன் செயினை வேகமாக இழுக்கவே தங்கச் செயின் மாணவியின் கழுத்தை அறுத்தது. மாணவியின் அலறல் சத்தம் கேட்டுவந்த நிமிஷாவின் சகோதரர் அந்த திருடனை பிடிக்க முயன்றார். ஆனால் அவரையும் தாக்கிவிட்டு கொள்ளையன் தப்பியோடினான்.
 
உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிமிஷா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நிமிஷாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
 
இதனால் ஆத்திரமடைந்த நிமிஷாவின் உறவினர்கள், மற்றும் பகுதிவாசிகள் வடமாநில தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிக்கு திரண்டு சென்று அங்கு பதுங்கியிருந்த கொள்ளையன் பிஜாவை சரமாரியாக தாக்கி அவனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் அவனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாநில தேர்தல் ஆணையர் சிறை செல்ல நேரிடும்: ஐகோர்ட் எச்சரிக்கை