குடிபோதையில், கூகுள்மேப் பார்த்து காரை ஓட்டி கடலுக்குள் சென்ற பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது.
இன்றைய உலகில் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்குச் செல்ல தற்போது கூகுள் மேல் அதிக பயனுள்ளதாக உள்ளது.
ஆனால், ஒரு சில நேரங்களில் கூகுள் மேப் சொதப்பிவிடுவதுண்டு. ஒருசிலர் புத்திசாலித்தனமாக இடமறிந்து மற்றவர்களிடம் கேட்டு சரியான இடத்தை அடைகின்றனர்.
இந்த நிலையில், ஒரு பெண் குடிபோதையில், கூகுள் மேப் மூலம் காரை ஓட்டி கடலுக்குள் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடலுக்குள் தவறிச் சென்ற அப்பெண்ணை பொதுமக்கள் காருடன் மீட்டனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.