Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகளை திருடிய மருத்துவர் கைது

Webdunia
புதன், 5 செப்டம்பர் 2018 (08:20 IST)
உத்திரபிரதேசத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகளை ஒரு மருத்துவரே திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 13-ம் தேதி உத்திரப்பிரதேசம் மாநிலம், மீரட்டிலிருந்து ஆக்ராவிற்கு மருந்துகள் கொண்டு செல்லப்பட்டது. ஆக்ராவிற்கு கொண்டு செல்லப்பட்ட மருந்துகளை சரிபார்த்த போது 2 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகள் காணாமல் போயிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
 
இதுகுறித்து போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் இது சம்மந்தமாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை பிடிக்க முழு வீச்சில் செயல்பட்டு வந்தனர்.
 
இந்நிலையில் இந்த கொள்ளையில் ஈடுபட்ட 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அதிர்ச்சிகரமான செய்தி என்னவென்றால் அந்த திருடர்களில் அனில் குமார் எனும் டாக்டரும் ஒருவர். அனில்குமார் தான் திருடிய மருந்துப் பொருட்களை சட்டவிரோதமாக மருந்தகங்களில் விற்பனை செய்துள்ளார்.
 
இதனையடுத்து போலீஸார் அவர்களை கைது செய்து தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments