Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் விலை ரூ.100ஐ தொட வாய்ப்பு: நிபுணரின் எச்சரிக்கையால் பொதுமக்கள் அதிர்ச்சி

Webdunia
புதன், 5 செப்டம்பர் 2018 (08:12 IST)
பெட்ரோல், டீசல் விலை கடந்த சில மாதங்களாக தினந்தோறும் மாற்றம் செய்யப்பட்டது. அதிலிருந்தே பெட்ரோல், டீசலின் விலை நாளுக்கு உயர்ந்து பொதுமக்களை வாட்டி எடுத்து வருகிறது. குறிப்பாக நடுத்தர மக்கள் இதனால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

கச்சா எண்ணெயின் விலை சர்வதேச அளவில் பெரிய ஏற்றத்தை கண்டிருக்காவிட்டாலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலை ஏறி வருவதாக கூறப்படுகிறது. நேற்று சென்னையில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.82.41க்கும், டீசல் ரூ.75.39க்கும் விற்பனை ஆகியது. இன்று அந்த விலையில் மாற்றமின்றி அதே விலையில் விற்பனையாகிறது.

இந்த நிலையில் பெட்ரோல் விலை விரைவில் ரூ.100 ஐ தொட வாய்ப்பு பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரூபாயின் மதிப்பு மீண்டு வர இன்னும் அதிக நாட்கள் ஆகும் என்றும் பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னரே ரூபாய் மதிப்பு உயர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவதால் பெட்ரோல் விலை விரைவில் ரூ.100ஐ தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ரூபாய் மதிப்பு சீராகும் வரை பெட்ரோல், டீசலுக்கான வரிகளை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கைகளாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'முட்டாப்பயலே, ராஸ்கல்.. மேடையில் ஒருவரை ஒருவர் திட்டி கொண்ட திமுக எம்.எல்.ஏ மற்றும் எம்பி..!

6 மாதத்தில் 5 போர்களை நிறுத்தினேன்.. தனக்கு தானே பெருமை பேசிக்கொண்ட டிரம்ப்..!

கிருஷ்ணரை வேண்டுவதால்தான் வெள்ளம் வருகிறது! மக்கள் புகாருக்கு அமைச்சர் அளித்த ’அடடே’ பதில்!

தமிழக பெண் காங்கிரஸ் எம்பியின் செயின் பறிப்பு.. அமித்ஷாவிடம் அளித்த புகார்..!

நலம் காக்கும் ஸ்டாலினுக்கு நன்றி! சமீரா ரெட்டி வெளியிட்ட வீடியோ வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments