Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

20 நாட்கள் தொடர் பலத்காரம்: பரிசு பொருட்களுக்கு மயங்கி... சீறழிந்த மாணவி

Advertiesment
20 நாட்கள் தொடர் பலத்காரம்: பரிசு பொருட்களுக்கு மயங்கி... சீறழிந்த மாணவி
, செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (11:17 IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு படித்து முடித்துள்ள மாணவியை காதல் என்ற பெயரில் வலைவிரித்து 20 நாட்கள் தொடர் பலாத்காரம் செய்த ராஜ்குமார் என்ற இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
தக்கலை அருகே 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவியை காணவில்லை என அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, இது குறித்து விசாரணையை துவங்கிய போலீஸார் 20 நாட்களுக்கு பிறகு கேரளாவில் கோனி பகுதியில் அந்த மாணவி இருப்பதை கண்டுபிடித்து மீட்டுள்ளனர். 
 
இதன் பின்னர் அந்த மாணவியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த மாணவி அளித்த வாக்குமூலம் பின்வருமாறு...
 
எனக்கு ராஜகுமாருடன் கடந்த ஒரு வருடத்திற்கு முன் பழக்கம் ஏற்பட்டது. தினமும் விதவிதமான ஆடைகளை அணிந்து, தினம் ஒரு இரு சக்கர வாகனத்தில் என்னை பின் தொடர்ந்தார். எனக்கு விலையுயர்ந்த பரிசு பொருட்களை வாங்கி தந்தார். இதனால், நானும் அவரை காதலித்தேன். 
webdunia
இந்நிலையில் நான் பள்ளி முடித்துவிட்டு வந்த போது திருமணம் செய்து கொண்டு கேரளா மாநிலத்தில் எனக்கு சொந்தமான வீட்டில் சொகுசு வாழ்க்கை வாழலாம் என்று கூறி என்னை அழைத்தார். நானும் வந்துவிட்டேன். 
 
ஆனால், இங்கு வாடகை வீட்டில் என்னை அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். பின்புதான் அவர் சொன்னது அனைத்தும் பொய் என எனக்கு தெரியவந்தது. என் நகைகளை கட்டாயப்படுத்தி வாங்கி விற்று செலவு செய்தார். கடந்த 20 நாட்களாக என்னை தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்தார் என தெரிவித்துள்ளார். 
 
இதனையடுத்து அந்த இளைஞர் மீது போக்சோ மற்றும் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீஸார் கைது செய்துள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நோட்டாவுக்கு வாக்களியுங்கள் – அதிமுக தொண்டர்களுக்கு நடிகர் ஆனந்தராஜ் அறிவுரை !