இமாச்சல பிரதேசத்தில் ரயில் சென்றுக் கொண்டிருக்கும்போதே பாலத்தின் அடிச்சுவர் இடிந்து விழும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் அதிகமான மலைகள் சூழ்ந்த மாநிலங்களில் இமாச்சல பிரதேசம் முக்கியமானது. இங்குள்ள மணாலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் புகழ்பெற்ற சுற்றுலா தளங்களாக உள்ள நிலையில் ஆண்டுதோறும் ஏராளமான மக்கள் இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா வருகின்றனர்.
தற்போது இமாச்சல பிரதேசத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காங்க்ரா பகுதியில் பாலம் ஒன்றின் மீது ரயில் சென்றுக் கொண்டிருக்கும்போதே, பாலத்தின் அடிப்பாக சுவர் ஆற்றில் இடிந்து விழுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் வைரலான நிலையில், அந்த பாலத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பாலம் முழுவதுமாக மூடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
Edit by Prasanth.K
Train Narrowly Dodges Disaster in Himachal as Bridge Retaining Wall Collapses Amid Heavy Floodwaters
— RT_India (@RT_India_news) July 21, 2025
The locomotive – reportedly carrying hundreds of passengers – just managed to safely cross the Chakki River in the Kangra district of Himachal Pradesh before part of the bridge… pic.twitter.com/V69QXrwb3n