Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

”மொரட்டு சிங்கிள் போல”; 50 மாணவிகளை கண்டு மயங்கி விழுந்த மாணவன்!

Advertiesment
Boy Swoon
, வியாழன், 2 பிப்ரவரி 2023 (16:04 IST)
பீகாரில் தேர்வு எழுத சென்ற மாணவன் சுற்றிலும் மாணவிகளாய் இருப்பதை கண்டு பீதியில் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகரீக வளர்ச்சி காரணமாக ஆண், பெண் பாகுபாடுகள் குறைந்து வரும் நிலையில், ஆண்களும், பெண்களும் நண்பர்களாய் வெளியே செல்வதும், சகஜமாக பழகுவதும் சாதாரண விஷயமாக மாறியுள்ளது. பலருக்கும் பாய் பெஸ்ட்டி, கேர்ள் பெஸ்ட்டி இருக்கிறாரா என்ற வகையில் பேச்சு போய்க் கொண்டிருக்கிறது.

ஆனால் இப்படியான உலகத்திலும் பெண்களை கண்டாலே பயம், பேசவே தயக்கம் என்று கூச்ச சுபாவத்துடன் இருக்கும் மொரட்டு சிங்கிள் இளைஞர்களும் இருக்கவே செய்கின்றனர். சிலர் பெண்களை கண்டாலே மிகவும் பயப்படுவர். அப்படியான சம்பவம் ஒன்று பீகாரில் நடந்துள்ளது.

பீகாரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார் மணிசங்கர் என்ற மாணவர். சமீபத்தில் இவர் ஸ்கூல் இண்டெர்மீடியேட் தேர்வு எழுதுவதற்காக சென்றுள்ளார். கூச்ச சுபாவமுடைய அவர் தேர்வு அறையை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.


தேர்வு அறை முழுவதும் சுமார் 50 மாணவிகள் அமர்ந்திருந்த நிலையில் ஒரு மாணவர் கூட அங்கு இல்லை. அத்தனை மாணவிகளுக்கு நடுவே ஒற்றை ஆளாய் அமர்ந்து தேர்வு எழுத தொடங்கிய மணிசங்கர் பதற்றமடைய தொடங்கியுள்ளார். சிறிது நேரத்தில் வியர்த்து கொட்டிய மணிசங்கர் திடீரென மயங்கி விழுந்தார்.

இதனால் உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கடும் காய்ச்சலும் ஏற்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. பின்னர் மருத்துவர்கள் சிகிச்சை அளித்த பின் தற்போது அவர் நலமுடன் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மாணவிகளுக்கு நடுவே அமர்ந்து தேர்வு எழுதிய மாணவர் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீமானால் ஒரு பென்சிலை கூட உடைக்க முடியாது: மருதையன் டுவிட்..!