பிரபு தேவாவிற்கே சவால் விடும் சிறுவனின் அசத்தல் டேன்ஸ்… வைரல் வீடியோ

Arun Prasath

சனி, 2 நவம்பர் 2019 (17:04 IST)
”முக்காலா முக்காபுலா” பாடலுக்கு பிரபு தேவாவிற்கே சவால் விடுவது போல் ஆடிய சிறுவனின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

காதலன் என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற “முக்காலா முக்காபுல்லா” என்ற பாடல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உலகமெங்குமுள்ள ரசிகர்களால் விரும்பி கேட்கப்பட்ட பாடல். தமிழகத்தில் ஒவ்வொறு ஊரிலும் இந்த பாட்டை ரசிக்காத நபரே கிடையாது என்று கூட சொல்லலாம். இந்த பாடலை கேட்டவுடன் நமது காலகள் தானாகவே ஆடக்கூடிய அளவிற்கு இந்த பாடலில் பீட்ஸ்களை வெறித்தனமாக அமைத்திருப்பார் ஏ.ஆர்.ரகுமான்.

இந்நிலையில் ஒரு சிறுவன், தெரு ஓரத்தில் “முக்காலா முக்காபுலா” பாடலுக்கு நடனமாடு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் பிரபு தேவாவிற்கே சவால் விடுவது போல் அந்த சிறுவன் துள்ளல் இசையில் உடல் பாவனைகளோடு ஆடுகிறான். இந்த வீடியோவை அனைவரும் ரசித்து பகிர்ந்து வருகின்றனர்.


வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் நடிகர் சங்க நிர்வாகத்தில் அரசு தலையிடக்கூடாது - கருணாஸ் காட்டம்!