நடிகர் சங்க நிர்வாகத்தில் அரசு தலையிடக்கூடாது - கருணாஸ் காட்டம்!

சனி, 2 நவம்பர் 2019 (16:57 IST)
நடிகர் சங்க நிர்வாகத்தில் அரசு தலையிடக்கூடாது என்று கருணாஸ் காட்டமாக பேட்டியளித்துள்ளார். 
 
சுமார் 3000 உறுப்பினர்கள் கொண்ட நடிகர் சங்கம் தங்களுக்குள் நிர்வாகிகளை தேர்வு செய்ய ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடத்துவதுண்டு. அது போல இந்த முறையும் தேர்தல் நடைபெற்று இன்னும் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், நடிகர் சங்கத்தை நிர்வகிக்க அரசு அதிகாரியை நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்து வருகிறது. இதற்கு தற்போது பதில் அளித்துள்ளார் நடிகரும், எம்.எல்.ஏவுமான கருணாஸ். அவர் கூறியுள்ளதாவது, 
 
நடிகர் சங்க நிர்வாகத்தில் அரசு தலையிடக்கூடாது. அதேபோல நடிகர் ரஜினிக்கு தாமதமாக விருது அறிவிக்கப்பட்டுள்ளது, சிறப்பு விருது பெறும் ரஜினிக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ’தாய் 'மொழியில் 'திருக்குறளை' வெளியிடும் பிரதமர் மோடி ! தமிழர்கள் பெருமிதம் !