Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை.! பாஜக நிர்வாகி கைது..! கட்சியில் இருந்து நீக்கம்..!!

Raped

Senthil Velan

, புதன், 26 ஜூன் 2024 (21:11 IST)
13 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து,  கொன்ற வழக்கில் உத்தராகண்ட் மாநில பாஜக தலைவர் கைது செய்யப்பட்டார்.  அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

உத்தராகண்ட் மாநிலத்தின் பாஜக தலைவர்களில் ஒருவரும், ஓபிசி ஆணையத்தின் நியமன உறுப்பினராகவும் இருந்தவர் ஆதித்ய ராஜ் சைனி. 13 வயது சிறுமியை குழுவாக பாலியல் பலாத்காரம் செய்து, கொன்ற வழக்கில் கூட்டாளியுடன் இவரை போலீசார்  இன்று கைது செய்துள்ளனர். 
 
ஹரித்துவாரில் வசிக்கும் 13 வயது சிறுமி காணாமல் போனதாக அந்த சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல் போன சிறுமியின் சடலம், பதஞ்சலி ஆராய்ச்சி மையம் அருகே பஹத்ராபாத் பகுதி நெடுஞ்சாலையோரம் கண்டெடுக்கப்பட்டது. 

webdunia
தனது மகளை பாஜகவை சேர்ந்த ஆதித்ய ராஜ் சைனி, அவரது கூட்டாளியுடன் சேர்ந்து, கூட்டுப் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் தாயார் புகார் தெரிவித்து இருந்தார்.  


இந்நிலையில் ஆதித்ய ராஜ் சைனி உட்பட இருவர் மீது போக்சோ மற்றும் கூட்டுப் பலாத்காரம், கொலைக் குற்றம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ளனர். இதை அடுத்து ஆதித்ய ராஜ் சைனியை கட்சியிலிருந்து ஒட்டுமொத்தமாக நீக்கம் செய்து பாஜக நடவடிக்கை எடுத்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு.! பிரதமர் மோடிக்கு முதல்வர் திடீர் கடிதம்..!