Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆசைக்கு இணங்காததால் 13 வயது சிறுமியை தீயிட்டு கொளுத்திய மர்ம நபர்கள்

Advertiesment
ஆசைக்கு இணங்காததால் 13 வயது சிறுமியை தீயிட்டு கொளுத்திய மர்ம நபர்கள்
, திங்கள், 12 பிப்ரவரி 2018 (12:58 IST)
மத்தியபிரதேசத்தில் பாலியல் பலாத்காரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த 13 வயது சிறுமியை மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் பாலியல் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்  கொண்டே வருகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் சில மனித மிருகங்கள், சிறுமிகள் என்றும் பாராமல் அவர்களுக்கு பாலியல் தொல்லை செய்கின்றனர்.  சிலர் அதற்கும் ஒரு படி மேலே போய், சிறுமிகளை கற்பழித்து கொலையும் செய்கின்றனர்.
 
இந்நிலையில் மத்தியபிரதேச மாநிலம்  ராஜ்கர் மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். சிறுமி வீட்டிற்குள் தனியாக இருப்பதையறிந்த மர்மநபர்கள் வீட்டிற்குள் நுழைந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர்.  சிறுமி கூச்சலிட முற்படவே, அந்த மனித மிருகங்கள் சிறுமி மீது மண்ணெண்னெய்யை ஊற்றி தீ வைத்து கொளுத்தி விட்டு தப்பியோவிட்டனர். 
 
அக்கம்பக்கத்தினர் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். 50 சதவீதம்  தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி வருகிறார். இச்சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருமணமான 7 வது நாளில் முன்னாள் காதலனுடன் ஓடிய இளம்பெண்