Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

75வது சுதந்திரதினம்: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றி பிரதமர் மோடி உரை!

75வது சுதந்திரதினம்: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றி பிரதமர் மோடி உரை!
, ஞாயிறு, 15 ஆகஸ்ட் 2021 (08:42 IST)
75வது சுதந்திரதினம்: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றி பிரதமர் மோடி உரை!
இன்று நாடு முழுவதும் 75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை அடுத்து டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி சற்றுமுன் தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். அந்த உரையில் அவர் கூறியதாவது:
 
ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் கைதட்டி பாராட்டுங்கள். அவர்கள் நம் நாட்டிற்கு பெருமை சேர்த்தவர்கள்
 
கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் உலகத்திலேயே நம் நாடுதான் முதலிடத்தில் உள்ளது. கொரோனா தடுப்பூசியை இந்தியாவிலேயே உருவாக்கியதால்தான் மக்களுக்கு தடுப்பூசி கிடைக்கிறது. 
 
உலகின் முன்னணி நாடுகளில் கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்க தொடங்கியதோ அப்போதே இந்தியாவிலும் கிடைத்தது
 
மின் இணைப்பு, ஓய்வூதியம், கேஸ் இணைப்பு கடைக்கோடி மக்களுக்கு கொண்டு சேர்த்திருக்கிறோம்
 
அனைத்து கிராமங்களிலும் சாலைகள், அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்பதே நமது நோக்கம்
 
அரசின் திட்டங்கள் ஒரு சிலரை சென்று சேராமல் போகும் அவல நிலை இப்போது இல்லை/ கிராமங்களில் கூட டிஜிட்டல் இந்தியாவின் தாக்கம் அதிகரித்துள்ளது
 
நாடு முழுவதும் ஏழைகள் உள்ளிட்ட அனைவருக்கும் 100 சதவீதம் இன்சூரன்ஸை உறுதிப்படுத்த வேண்டும்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹைதி தீவில் பயங்கர நிலநடுக்கம்: 300 பேர் பலி