கர்நாடக மாநிலம் தனது வீட்டின் முன் குப்பைகளை கொட்டியது தொடர்பாக ஏற்பட்ட ஒரு தகராறில் 70 வயது மூதாட்டியை மரத்தில் கட்டி வைத்து கொடூரமாகத் தாக்கியவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் ஹுச்சம்மா என்ற மூதாட்டி, தனது வீட்டின் வாசலில் அண்டை வீடான பிரேமா குப்பைகளை கொட்டியதைக் கண்டித்துள்ளார். இதனையடுத்து, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் மூதாட்டியின் சில வார்த்தைகளால் கடும் கோபமடைந்த பிரேமா, தனது வீட்டில் உள்ள ஆண்களின் உதவியுடன், மூதாட்டி ஹுச்சம்மாவை அவரது வீட்டிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து வந்து, ஒரு மரத்தில் கட்டி வைத்து, கொடூரமாக தாக்கியுள்ளார்.
இதுகுறித்த தகவல் தெரிய வந்தவுடன் ஆனந்தபுரா காவல் நிலையத்தில் உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட ஹுச்சம்மாவை தாக்கிய பிரேமா கைது செய்யப்பட்டுள்ளார்," என்று போலீசார் மேலும் விளக்கமளித்தனர்.