Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்தினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை

Webdunia
சனி, 23 டிசம்பர் 2017 (11:52 IST)
குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்தினால் 7 ஆண்டு விதிக்க தண்டனை விதிக்க மத்திய அரசு புதிய சட்டம் உருவாக்கியுள்ளது. 

குடிபோதையில் வாகனங்களை இயக்குவதால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. தற்பொழுது இருக்கும் சட்டத்தில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்தினால் 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராத தொகை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படுகிறது. இதை தொடர்ந்து தற்பொழுது மத்திய அரசு, மோட்டார் வாகன சட்டத்தை மாற்றி அமைத்து அதில் திருத்தம் செய்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. அதன்படி குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தி உயிரிழப்பு நேரிட்டால் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். இதுபோல் கடுமையான சட்டங்களை கொண்டு வருவதன் மூலம் குடிபோதையால் ஏற்படும் விபத்துகள் குறைய வாய்ப்புள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொரோனா போன்று பரவும் புதிய வைரஸ்.. இம்முறை ரஷ்யாவில் இருந்தா?

புவிசார் குறியீடு ஏன் தரப்படுகிறது? அதனால் என்ன பயன்? தமிழ்நாட்டின் புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள்!

தங்கம் விலை இன்று ஏற்றமா? சரிவா? சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

நேற்றைய மோசமான சரிவுக்கு பின் இன்று உயர்ந்தது பங்குச்சந்தை.. நிப்டி, சென்செக்ஸ் நிலவரம்..!

உங்களை நேரில் சந்திக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments