Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கு 7 வீரர்கள் தகுதி பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு- அமைச்சர் உதயநிதி

Webdunia
செவ்வாய், 20 ஜூன் 2023 (13:32 IST)
விளையாட்டுத்துறையிலும் தமிழ்நாடு முதலிடத்தை நோக்கி வெற்றி நடைபோடுவதற்கு உதாரணமாகத் திகழும் நம் வீரர் வீராங்கனையருக்கு வாழ்த்துகள்  என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சி  நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு மக்கள் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் விளையாட்டுத்துறையில் ஈடுபட்டு சாதிக்க அரசு பலவகையில் உதவி வருகின்றது.

’’ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் கடந்த 15-ம் தேதி முதல் 19 வரை நடைபெற்ற தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில்தமிழக வீரர்கள் பதக்கங்கள் பெற்றுள்ளனர்.
இதுபற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

’’ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் கடந்த 15-ம் தேதி முதல் 19 வரை நடைபெற்ற தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், 9 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என 18 பதக்கங்களை பெற்று, 127 புள்ளிகளுடன் தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டத்தை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது.  இதில் சிறப்பாக விளையாடி, ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கு 7 வீரர்கள் தகுதி பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு.

விளையாட்டுத்துறையிலும் தமிழ்நாடு முதலிடத்தை நோக்கி வெற்றி நடைபோடுவதற்கு உதாரணமாகத் திகழும் நம் வீரர் வீராங்கனையருக்கு வாழ்த்துகள்’’  என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் 121 பேர் உயிரிழந்த விவகாரம்.. 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments