ஜம்மு-காஷ்மீரில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு 634 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்படுவதாக முதலமைச்சர் மெஹ்பூபா முஃப்தி அறிவித்துள்ளார்.
ரமலான் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாட தயாராகிவுள்ள நிலையில் ஜம்மு-காஷ்மீரில் முதலமைச்சர் மெஹ்பூபா முஃப்தி அவர்கள் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-
போராட்டத்தின் போது கற்களை ஏறிபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து ஜம்மு-காஷ்மீர் அரசு சிறையில் அடைத்து வைப்பது வழக்கம். ரமலான் பண்டிகையை முன்னிட்டு, அது போன்று கைது செய்யப்பட்டுள்ள 634 பேரை விடுதலை செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. இது அவர்களின் வாழ்வை மறுசீரமைப்பு செய்துகொள்ள கொடுக்கப்படும் ஒரு சந்தர்ப்பம், என்று கூறினார்.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்