Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஈராக்கில் கார் வெடிகுண்டு தாக்குதல் : பலி எண்ணிக்கை 250ஐ தொட்டது

Advertiesment
Baghdad
, புதன், 6 ஜூலை 2016 (17:50 IST)
ஈராக் நாட்டின் பாக்தாத் நகரில் தற்கொலைப்படை தீவிரவாதி ஏற்படுத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 250 பொதுமக்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.


 

 
இந்த தாக்குதல் கடந்த 2ஆம் தேதி நடைபெற்றது. ரம்ஜானை கொண்டாடுவதற்காக பொதுமக்கள், ஏராளமான பொருட்களை வாங்குவதற்காக பாக்தாத் நகரில் கூடியிருந்தனர். அப்போது, காரில் வெடிகுண்டுடன் அங்கு வந்த ஒரு தீவிரவாதி, காரை வெடிக்கச் செய்தான். அதில் அந்த இடமே குழுங்கியது. அதில் பலர் உடல் சிதறி பலியாகினர். 
 
அந்த தாக்குதலில் 100 பேருக்கும் மேல் பலியாகியிருக்கலாம் என்று முதலில் கூறப்பட்டது. ஆனல், பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று கருதப்பட்டது.  இந்நிலையில், இந்த தக்குதலில் 250 பேர் பலியாகிவிட்டனர் என்று ஈராக் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளது.
 
இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போரிடாமல் தப்பிய தீவிரவாதிகளை கொதிக்கும் தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற ஐ.எஸ் தீவிரவாதிகள்