சளி காய்ச்சலுக்கு வழங்கப்படும் 61 மருந்துகள் தரமற்றவையாக இருப்பதாக மtஹ்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகை மருந்து மாத்திரைகள் மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்களால் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் பல போலி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஒரே மாதத்தில் மட்டும் 1015 மருந்துகள் ஆய்வுக்கூட்படுத்தப்பட்ட நிலையில் அதில் 61 மருந்துகள் தரமற்றவையாக இருப்பதாகவும் இவை காய்ச்சல் சளி ஆகியவற்றிற்காக வழங்கப்பட்டு வருவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த மருந்துகள் உத்தரகாண்ட் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த 61 மருந்துகள் குறித்த முழுவிவரங்கள் https://cdsco.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது பார்க்கும் கூறப்படுகிறது.