Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மருந்து வாங்க சென்றவர் திடீர் கோடீஸ்வரரான அதிசயம்.. இன்ப அதிர்ச்சி கொடுத்த லாட்டரி..!

மருந்து வாங்க சென்றவர் திடீர் கோடீஸ்வரரான அதிசயம்.. இன்ப அதிர்ச்சி கொடுத்த லாட்டரி..!
, புதன், 8 நவம்பர் 2023 (17:44 IST)
மருந்து கடையில் மருந்து வாங்க சென்றவர் திடீர் கோடீஸ்வரர் ஆன அதிசயம் பஞ்சாப் மாநிலத்தில் நடந்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஷீத்தல் சிங் என்ற விவசாயி தனது குடும்பத்துடன் வறுமையால் வாடி வந்த நிலையில் தனது குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாததால் மருந்து வாங்க மருந்து கடைக்கு சென்றார். அப்போது மருந்து வாங்கிய பின் அதே கடையில் லாட்டரி இருப்பதை பார்த்து ஒரு லாட்டரி சீட்டு வாங்கி உள்ளார்.

அதன் பின்னர் வீட்டுக்கு திரும்பி அவர் அந்த லாட்டரி டிக்கெட்டை மறந்துவிட்டார்.  அவர் லாட்டரி சீட்டு வாங்கிய அடுத்த நாளே லாட்டரி கடைக்காரரிடம் இருந்து போன் வந்துள்ளது. அதில் அவர் வாங்கிய சீட்டுக்கு ரூ.2.50 கோடி பரிசு கிடைத்ததாக லாட்டரி கடைக்காரர் கூறியதை கேட்டு விவசாயி ஷீத்தல் சிங் இன்ப அதிர்ச்சி அடைந்தார். உடனே இந்த சந்தோஷமான செய்தியை தனது குடும்பத்தினரிடம் பகிர்ந்து கொண்டார்.  இந்த பணத்தை தனது குடும்பத்தின் வளர்ச்சிக்கு செலவு செய்யப் போவதாக அவர் கூறியுள்ளார்.

இது குறித்து லாட்டரி கடைக்காரர் கூறிய போது நான் 15 ஆண்டுகளாக லாட்டரி சீட்டு விற்பனை செய்து வருகிறேன், எனது கடையில் விற்ற லாட்டரி சீட்டுக்கு கோடிக்கணக்கில் பரிசு விழுந்தது இதுவே முதல் முறை என்று கூறியுள்ளார்.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் மாநில உரிமையைப் பாதுகாக்க வேண்டும் - தினகரன்