இந்தியா கூட்டணியில் உள்ள ஆறு எம்பிக்களுக்கு திடீரென அவர்களது பதவிக்கு ஆபத்து என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி 43 இடங்களை வென்றது என்பதும் பாஜக கூட்டணி 33 இடங்களை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்தியா கூட்டணியில் போட்டியிட்ட உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆறு பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பதாகவும் அவர்களது வழக்குகளின் தீர்ப்புகள் மிக விரைவில் வெளிவர இருப்பதாகவும் ஒருவேளை அந்த தீர்ப்பில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களது பதவி பறிபோகும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது
1. காஜிபூர் மக்களவை தொகுதியில் சமாஜ்வாதியின் அப்சல் அன்சாரி மீது ஏற்கெனவே குண்டர் சட்டத்தில் விதிக்கப்பட்ட 4 ஆண்டுகள் சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம் இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகிறது
2. அசம்கார் தொகுதியில் வென்ற தர்மேந்திர யாதவ் மீது 4 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்கு இரண்டாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டால் அவரது எம்பி பதவி பறிபோகும்.
3. ஜான்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற சமாஜ்வாதி கட்சியின் பாபு சிங் குஷ்வாஹா மீது உள்ள சொத்து மோசடி வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
4. சுல்தான்பூர் தொகுதியில் பாஜகவின் மேனகா காந்தியை தோற்கடித்த ராம்புவால் நிஷாத் மீது குண்டர் சட்டம் உட்பட 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
5. சந்தெளலி தொகுதியில் போட்டியிட்ட வீரேந்திர சிங் மீதும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
6. சஹாரன்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் தலைவர் இம்ரா மசூத் மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்கு உள்ளது.