பாஜகவில் இணைந்தவர்களின் வழக்குகள் முடித்துவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகிறது.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் 18 வது மக்களவை தேர்தல் தொடங்கவுள்ளது. இதுகுறித்து இந்திய தலைமைத் தேர்தல் ஆனையம் அறிவித்தது.
இதற்காக அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், வரும் தேர்தலுக்கு முன் பாஜகவில் 1 லட்சம் பேரை இணைக்க அக்கட்சி திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக தகவல் வெளியானது. அண்மையில், விஜயதாரனி, சரத்குமார், ராதிகா உள்ளிட்டோர் பாஜகவில் இணைந்தனர்.
இந்த நிலையில், பாஜகவில் சேர்ந்த 25 பேரில் 3 பேருக்கு எதிரான ஊழல் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளதாகவும், 20 பேருக்கு எதிரான வழக்குகள் விசாரணை இன்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி பிரதமர் ஆனதும் முதல் ஊழல் வழக்குகளுக்கு ஆளான எதிர்க்கட்சி தலைவர்கள் 25 பேர் பாஜகவில் இணைந்துள்ளனர். விசாரணை அமைப்புகளை அரசியல் ஆயுதமாக பாஜக பயன்படுத்துவதாக காங்கிரச் தலைவர் கார்க்கே குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து மு.க.ஸ்டாலின், ''மோடியின் குடும்பம் என்பது தான் பாஜகவின் வாஷிங் மெஷின் பாணி ஆதாரப்பூர்வமாக தோலுரிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டு கால பாஜக ஆட்சி என்பது இந்தியாவின் உயர் விசாரனை அமைப்புகளை எவ்வளவு இழிவான நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதற்கு இதைவிட சான்று வேண்டுமா?'' என்று விமர்சித்துள்ளார்.