Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கேரளாவில் இன்று ஒரே நாளில் 5000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு!

Advertiesment
கேரளாவில் இன்று ஒரே நாளில் 5000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு!
, வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (21:37 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் உள்ள பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து விட்டதை அடுத்து ஊரடங்கு தளர்வு ஏற்பட்டு விட்டது என்பதும் கிட்டத்தட்ட இயல்பு நிலை திரும்பி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் மட்டும் தினந்தோறும் ஐயாயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
கேரளாவில் இன்று மட்டும் 5397 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 5332 பேர் பொருளில் இருந்து கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளதாக 18 பேர் இன்று ஒரே நாளில் பலியாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
மேலும் கேரளாவில் மொத்தம் 3954 பேர் பலியாகி உள்ளனர் என்பதும் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின்  எண்ணிக்கை 63 ஆயிரத்து 961 என்றும் கடந்த 24 மணி நேரத்தில் 74 ஆயிரத்து 408 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கேரள அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்கவரும் ஷாலினி அஜித் !