Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா பாதிப்பு : 50 % அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரியலாம் !

Advertiesment
கொரோனா பாதிப்பு : 50 % அரசு  ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரியலாம்  !
, வியாழன், 19 மார்ச் 2020 (15:03 IST)
கொரோனா பாதிப்பு : 50 % அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரியலாம் !

சீனாவிலிருந்து பரவ தொடங்கிய கொரொனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக உலகம் முழுவதிலும் 8,810 பேர் இறந்துள்ளனர். இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்தியாவில் கொரோனாவால் மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 169 ஆக உயர்ந்துள்ளது.
 
இந்திய அரசு கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் பல்வேறு நாட்டு விமான சேவைகளை நிறுத்தியுள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களிலும் பள்ளிகள், கேளிக்கை விடுதிகள், ஷாப்பிங் மால், திரையரங்குகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மக்கள் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
இதனால் மக்கள் பயணத்தை வெகுவாக குறைத்து கொள்ள தொடங்கியுள்ளனர். இந்திய ரயில்களில் பலவற்றில் மக்கள் கூட்டம் குறைந்துள்ளது. பலர் டிக்கெட் முன்பதிவுகளை கேன்சல் செய்து கொண்டுள்ளனர்.
 
இந்நிலையில், சட்டிஸ்கர் மாநிலத்தில் முதல் முறையாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமை லண்டனில் இருந்து ராய்பூருக்கு திரும்பிய 4வயது பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.
 
தமிழகத்தில் நேற்று மேலும் ஒருவருக்கு கொரோனோ தொற்று இருப்பதாக உறுதியாகியுள்ளது.
 
இந்நிலையில் நேற்று கேரளா, கோவை,கர்நாடகா செல்லும் பேருந்துகள் வரும் 31 ஆம் தேதிவரை நிறுத்துவதாக அறிவித்துள்ளன.
 
இந்நிலையில், கொரோனா தடுப்பு  நடவடிக்கையாக ஊழியர்கள், ஊழியர்கள் எண்ணிக்கை பாதியாக குறைத்தது மத்திய அரசு. எஞ்சிய 50% மத்திய அரசு உழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம் என்று தெரிவித்துள்ளது.
 
50 % B,C பிரிவு அரசு ஊழியர்கள் மட்டும் பணிக்கு வந்தால் போதும் எனவும் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாளை நிச்சயம் தூக்கு; பதறும் 4 குற்றவாளிகள்!