Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

4 கட்டங்களாக பரவும் கொரோனா: முழு விவரம் இதோ...!!

4 கட்டங்களாக பரவும் கொரோனா: முழு விவரம் இதோ...!!
, வியாழன், 19 மார்ச் 2020 (14:08 IST)
கொரோனா நான்கு கட்டங்களாக பரவும் என கூறப்பட்டு அந்த கட்டங்கள் குறித்து விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. 
 
உலகமெங்கும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதனால் பலி ஆனவர்களின் எண்ணிக்கை 8000 ஐ தாண்டியுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் கொரோனா நான்கு கட்டங்களாக பரவும் என கூறப்பட்டு அந்த கட்டங்கள் குறித்து விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு... 
 
முதல் கட்டம் - இறக்குமதி பரவல்: 
கொரோனா பாதித்த வெளிநாடுகளில் இருந்து இங்கு வருவோருக்கு கொரோனோ வைரஸ் தொற்று கண்டறியப்படுவது.
 
இரண்டாம் கட்டம் - உள்நாட்டு பரவல்: 
வெளியில் இருந்து வந்த நபர்களின் மூலமாக உள்நாட்டில் நோய் பரவுவது. 
 
மூன்றாம் கட்டம் - சமூக பரவல்: 
உள்நாட்டிற்குள் பாதிக்கப்பட்டவர்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவுவது.
 
நான்காம் கட்டம் - தொற்றுநோய் பரவல்: 
எங்கு யார் மூலமாகப் பரவியது என அறிய முடியாத அளவிற்கு உள்நாட்டிற்குள் தீவிரமாகப் பரவுவது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா வைரஸ் உருவானது இப்படிதான்..! – உண்மையை உடைத்த அமெரிக்க விஞ்ஞானிகள்!