Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 வயது சிறுமிக்கு நேர்ந்த பாலியல் கொடுமை

Webdunia
ஞாயிறு, 10 டிசம்பர் 2017 (15:30 IST)
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாலியல் வன்முறைகளின் தொடர்சியாக அரியானாவில் 5 வயது சிறுமியை ஒரு கொடூர கும்பல் தூக்கிச் சென்று கற்பழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தின் உக்லானா கிராமத்தில் 5 வயது சிறுமி நேற்று இரவு வீட்டில் தாயாருடன் தூங்கி கொண்டிருந்தாள். காலையில் எழுந்து பார்த்த போது சிறுமியை காணவில்லை. அதிர்ச்சியடைந்து தேடி பார்த்த போது, ஒரு தாய் தனது மகளை பார்க்கக் கூடாத நிலையில், அருகே இருந்த குளம் அருகே வாய் மற்றும் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் பிறப்புறுப்பில் பலத்த காயம் ஏற்பட்டதாலே அவர் உயிரிழந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. முதல்கட்ட விசாரணையில் சிறுமி கொடூரமாக கற்பழிக்கப்பட்டது தெரியவந்தள்ளது. குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைத்துள்ள போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இதுபோல் செய்த மிருகங்களுக்கு அரபு நாடுகளில் கொடுக்கப்படும் தண்டனையை தந்தால் மட்டுமே அசம்பாவிதங்களை தடுக்க முடியும் என்பது பெரும்பாலான மக்களின் கருத்தாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

திருநங்கையை உடன் பிறந்த தம்பியே கொலை செய்ய முயற்சி: திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்..!

பாஜகவுக்காக வாக்கு திருடும் தேர்தல் ஆணையம்.. யாரையும் விடமாட்டோம்: ராகுல் காந்தி ஆவேசம்..!

தமிழ்நாட்டில் வாக்காளர்களாக மாறும் 6.5 லட்சம் பீகார் மக்கள்.. யாருக்கு வாக்களிப்பார்கள்?

சுதந்திர தினம் உள்பட இந்த மாதம் 15 நாட்கள் வங்கி விடுமுறை.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்