மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மற்றும் தெலுங்கானா ஆகிய ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில் முதல்கட்ட முன்னணி நிலவரங்கள் தற்போது தெரியவந்துள்ளது.
இதன்படி மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் கூட்டணி முன்னணி பெற்று வருகிறது. ராஜஸ்தானில் காங்கிரஸ் 7 தொகுதிகளிலும் பாஜக 5 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளது. மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் 5 தொகுதிகளிலும் பாஜக 3 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளது. அதேபோல் சத்தீஷ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், பாஜக 8 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரியர் சமிதி கட்சியும் காங்கிரஸ் கூட்டணியும் தலா இரண்டு தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. முதல்கட்ட முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக வந்துள்ளதால் காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.