Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இஸ்ரேல் நாட்டின் சுற்றுலாதளத்தில் பங்கரவாதிகள் தாக்குதல்

isrel- Palestine
, சனி, 8 ஏப்ரல் 2023 (21:14 IST)
இஸ்ரேல்  நாட்டின்  டெல் அவிவ் நகரில் பங்கரவாதிகள் நேற்று   தாக்குதல் நடத்தியுள்ளனர்.
 
இஸ்ரேல் நாட்டிற்கும் பாலஸ்தீனத்திற்கும் பல ஆண்டுகளாக சண்டையிட்டு வருகின்றன. இந்த நிலையில், பாலஸ்தீன நாட்டில் காசா முனை ஹமாஸ் அமைப்பில் உள்ளது. இந்த ஹமாஸ் அமைப்பை பாதுகாப்பு காரணங்களாக இஸ்ரேல்  நாடு பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது.

இங்கு, இஸ்ரேலின் சில பகுதிகள் உள்ள நிலையில், இங்கு இஸ்ரேலிய ராணுவப் படை மற்றும்  பாலஸ்தீன ராணுவத்திற்கும் இடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது.

இந்த நிலையில், ஜெருசலேத்தில் உள்ள மசூதி  ஒன்றில் முஸ்லீம்கள் தொழுகையின்போது, இஸ்ரேல் திடீரென்று தாக்குதல் நடத்தியது.

இதற்குப் பதிலடியாக, லெபனான் நாட்டின் பாலஸ்தீன ஆயுதப்படையினர், இஸ்ரேல் மீது ராக்கெட் குண்டுகள் வீசினர்.

இந்த நிலையில், இன்று காலை இஸ்ரேல் படையினர், பாலஸ்தீன ஆயுதப்படையினர் மீது வான்வெளி தாக்குதல் நடத்தினர். இதில், காசா நகர கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்தன.

காரில் சென்றுகொண்டிருந்த 2 பெண்களை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர்.  இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், இஸ்ரேல்  நாட்டின்  டெல் அவிவ் நகரில் பங்கரவாதிகள நேற்று  தாக்குதல் நடத்தியுள்ளனர்.

காப்மண் கடற்கரை  பகுதி சிறந்த சுற்றுலாத்தளமான இருக்கும் நிலையில்,  இங்கு சுற்றுலாப் பயணிகள் இருந்தனர். அப்போது, மர்ம நபர் ஓட்டிவந்த ஒரு கார் கூட்டத்தில் புகுந்தது. இதில், ஒருவர் பலியானார். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்துப் பகுதியை நோக்கி வந்த போலீஸாரை காரை ஓட்டி வந்தவன் துப்பாக்கியால் சுட்டான். அவனைச் சுற்றிவளைத்துப் பிடித்த போலீஸார் அவனிடம் விசாரித்தனர். அதில்,  அவன் பயங்கரவாத கும்பலைச் சேர்ந்தவன் என்ற தகவல் கிடைத்துள்ளளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிங்கப்பூர்: வணிக வளாகத்தில் தமிழர் கீழே தள்ளி கொலை !