Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போலீஸார் நடத்திய அதிரடி தாக்குதலில் 5 தீவிரவாதிகள் பலி

Advertiesment
கஷ்மிர் காவல்துறை துப்பாக்கி Police Terrorist Athority Kashmir
, ஞாயிறு, 16 செப்டம்பர் 2018 (16:23 IST)
காஷ்மீர்  மாநிலத்தில் உள்ள குல்காம் மாவட்டம் சவுகாம் கிராமத்தில் தீவிரவாதிகள் புகுந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. போலீஸாருடன் பாதுகாப்பு படையினரும் கூட்டாக சேர்ந்து கொண்டு தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

பயங்கரவாதிகள் மறைந்திருந்த போலீஸாரை துப்பாக்கியால் சுட்டனர். இதனையடுத்து பதிலுக்கு போலீஸாரும் பாதுகாப்பு படையினரும் திருப்பி தாக்கியதில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.இத் பாதுகாப்பு படையினருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பதற்றமான சூழ்நிலையில் பொது மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு தெற்கு காஷ்மீரில் இன்றும் ரெயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பாட்காம்- காசிகுந்த்- அனந்த்நாக் பகுதிகளுக்கு இயக்கப்படும் ரெயில்களும், வடக்கு காஷ்மீரில் ஸ்ரீநகர்- பாட்காம், பாரமுல்லா போன்ற பகுதிகளில் இயக்கப்படும் ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏபிவிபி அமைப்பை காலி செய்த இடது சாரி மாணவர்கள்; கலைக்கட்டிய ஜேஎன்யூ