Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 12 January 2025
webdunia

பெரும் விபத்தை தடுத்த டிரைவருக்கு ரூ. 5 லட்சம் பரிசு

Advertiesment
பெரும் விபத்தை தடுத்த டிரைவருக்கு ரூ. 5 லட்சம் பரிசு
, புதன், 4 ஜூலை 2018 (06:39 IST)
மும்பையில் சமயோஜிதமாக செயல்பட்டு பெரும் விபத்தை தடுத்த ரயில் ஓட்டுநருக்கு மத்திய அரசு ரூ.5 லட்சம் வெகுமதி அளித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்பொழுது கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக வீடுகளில் தண்ணீர் புகுந்து மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அதே போல் நகரின் பல இடங்களில் பாலங்கள் இடிந்து விழுந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில் கனமழையால் மும்பை அந்தேரி பகுதியில் ரயில் டிராக்கின் மேல் உள்ள மேம்பாலத்தின் பக்கவாட்டு பகுதி இடித்து ரயில்வே பாலத்தில் திடீரென விழுந்தது. அந்த நேரத்தில் அந்தேரி ரயில் நிலையத்தில் இருந்து லோக்கல் ரயில் ஒன்று புறப்பட்டு வந்துகொண்டிருந்தது.
 
அப்போது ரயிலின் டிரைவர் பாலம் இடிந்து விழுந்திருந்ததைக் கண்டு சமயோஜிதமாக செயல்பட்டு உடனடியாக ரயிலை நிறுத்தினார். டிரைவரால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.
webdunia
இதனையடுத்து மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் சாமர்த்தியமாக செயல்பட்ட டிரைவருக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என அறிவித்துள்ளார். இதே பாலம் சில நாட்களுக்கு முன்னர் ஆய்வு செய்யப்பட்டு, நல்ல நிலையில் இருப்பதாக சான்றிதழ் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராயப்பேட்டையில் போலீஸை தாக்கிய ரவுடி என்கவுன்டரி சுட்டுக்கொலை!