இந்தியாவில் உள்ள எம்பிக்களில் 40 சதவீத எம்பிக்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டில் வரும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், இதற்காக அனைத்து கட்சிகளும் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், இந்தியாவில் உள்ள எம்பிக்களில் 40 சதவீத எம்பிக்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதில், இந்திய நாடாளுமன்ற எம்பிக்களில் 40 சதவீதம் பேர்(306) பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளது. 25 சதவீதம் பேர் ( 194) மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்ற குற்ற வழக்குகள் உள்ளதாக ஜனநாயக சீர்திருத்த அமைப்பில் ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 41 எம்பிக்கள் குற்றவழக்கை சந்தித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.