இந்தியாவில் ஒரே நாளில் 391 பேருக்கு கொரோனா! 6 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்புகள்!

Prasanth K
ஞாயிறு, 8 ஜூன் 2025 (09:50 IST)

இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

2020ம் ஆண்டில் உலகம் முழுவதும் பரவி பல லட்சம் உயிர்களை பலி வாங்கிய கொரோனா வைரஸின் வேரியண்டான ஒமைக்ரான் தற்போது ஆசிய நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. தாய்லாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் முதலாகவே கொரோனா பாதிப்புகள் மெல்ல அதிகரித்து வருகிறது.

 

பல மாநிலங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமாக இல்லாவிட்டாலும் பரிந்துரையாக அளிக்கப்படுகிறது. முக்கியமாக கர்ப்பிணி பெண்கள் முடிந்தளவு மாஸ்க் அணிவதை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் நேற்று ஒரு நாளில் 391 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 5,755 ஆக உயர்ந்துள்ள நிலையில் நாளைக்குள் 6 ஆயிரத்தை தாண்டும் என கூறப்படுகிறது. நேற்று மட்டும் கொரோனா பாதித்த 4 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் தொடர் குண்டு வெடிப்பு: 3 போலீசார் பலி, எஸ்.பி. படுகாயம்

2026 தேர்தலில் விஜய் வெற்றி பெறுவாரா? வைகோவின் கணிப்பு..!

6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரின் ஆணுறுப்பை வெட்டிய தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..

ரூ.500-க்கு எரிவாயு சிலிண்டர்! தேஜஸ்வி யாதவ் கொடுத்த அதிரடி வாக்குறுதி..!

திடீரென வைரலாகும் அண்ணாமலையில் வைரல் வீடியோ.. அப்படி என்ன செய்தார்?

அடுத்த கட்டுரையில்
Show comments