Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யானையை கொன்றது யார்? அடையாளம் காணப்பட்ட மூவர்!

யானையை கொன்றது யார்? அடையாளம் காணப்பட்ட மூவர்!
, வியாழன், 4 ஜூன் 2020 (17:15 IST)
யானை கொல்லப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல். 
 
கேரள மாநிலம், மலப்புரம் கிராமத்துக்கு அருகில் காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்துள்ளது. இதனைப் பார்த்த சிலர் அண்ணாசிப் பழம் ஒன்றை அந்த யானைக்கு கொடுத்துள்ளனர். அந்த அண்ணாசிப் பழத்தை யானைக் கடிக்கையில் அதில் வைக்கப்பட்டு இருந்த வெடி ஒன்று வெடித்துள்ளது. இதனால் யானையின் நாக்கு மற்றும் வாய் கடுமையாக காயமடைந்துள்ளது.
 
இதையடுத்து வலியுடனேயே அந்த கிராமத்தைச் சுற்றி வந்த யானை, அந்த ஊரில் இருக்கும் வீட்டையோ மனிதர்களையோ தாக்கவில்லை. இதையடுத்து வெள்ளியாற்றில் இறங்கி நின்றுள்ளது அந்த யானை. வனத்துறை அதிகாரிகள், அந்த யானையை கும்கி யானைகளோடு மீட்க முயன்றுள்ளனர். ஆனால் ஆற்றை விட்டு வெளியே வராத அந்த யானை, மே 27 ஆம் தேதி இறந்துள்ளது. இதையடுத்து மருத்துவர் முன் நடந்த பிரேதப் பரிசோதனையில் அந்த யானையின் வயிற்றில் ஒரு சிசு இருந்தது தெரிந்துள்ளது.
 
அந்த யானைக்கு அண்ணாசிப் பழம் கொடுக்கப்பட்டது குறித்து விவரம் தெரியாமல் இருந்தது. மேலும் அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது. 
 
இந்நிலையில், யானை வெடிவைத்து கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனாவுக்கு எதிராகப் போராடிய இன்னொரு முக்கிய சீன மருத்துவர் மரணம் - அரசுக்கு எதிராக பொங்கும் கோபம்