Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெட்ரோல் பங்க் எண்ணெய் தொட்டியில் விழுந்து 3 பேர் பலி

Advertiesment
petrol
, திங்கள், 29 மே 2023 (16:07 IST)
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு  பெட்ரோல் பங்க் எண்ணெய்த் தொட்டியில் விழுந்த நபர் மற்றும் அவரை காப்பாற்றச் சென்ற மேலும் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் அண்ணமையா மாவட்டம் ராயசோட்டி நகரில் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது.  இந்த பெட்ரோல் பங்கில் உள்ள எண்ணைய் சேமிக்கும் தொட்டியை  மாதங்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்ப்படும்.

இந்த நிலையில், இன்று காலை 3 பேர் எண்ணெய் சேமிப்புக் கிடங்கை சுத்தம் செய்ய சென்றனர். அதில் ஒருவர் கால் தவறி  எண்ணெய் தொட்டிக்குள் விழுந்தார். அவரைக் காப்பாற்றச் சென்ற மேலும் 2 பேரும் தொட்டிக்குள் விழுந்தனர். மூன்று பேருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்,  தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர்.  இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் போராடி ஒருவரை உயிருடன் மீட்டனர். மேலும் 2 பேரை சடலமாக மீட்டனர். மீட்கப்பட்ட  நபரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமைச்சர் அமித்ஷா மணிப்பூர் செல்ல உள்ள நிலையில்...மேலும் 6 பேர் உயிரிழப்பு