தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வரும் அரிக்கொம்பன் யானையை பிடிக்க 3 நாட்களாக வனத்துறையினர் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
கேரளா மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள சின்னக்கானல், சாந்தம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் அட்டகாசம் செய்து வந்த ஒற்றை காட்டுயானை அரிக்கொம்பன். கடந்த 5 ஆண்டுகளில் ஏராளமான விளைநிலங்களை நாசம் செய்துள்ள அரிக்கொம்பன் 18 பேரை தாக்கி கொன்றுள்ளது.
கடந்த மாதம் அரிக்கொம்பனை பிடித்த கேரள வனத்துறை அதை தேக்கடி அருகே உள்ள மேதகானம் வனப்பகுதியில் விட்டனர். அங்கிருந்து தமிழக வனப்பகுதிக்குள் நுழைந்த அரிக்கொம்பன் தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. தொடர்ந்து அரிக்கொம்பனை காட்டுப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முயன்று வருகின்றனர்.
தற்போது அரிக்கொம்பன் சுருளிப்பட்டி யானைகஜம் வனப்பகுதியில் இருந்து நகர்ந்து சென்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அரிக்கொம்பனை காட்டுக்குள் அனுப்ப 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.