பீகார் ஆசிரமத்தில் தங்கியிருந்த 3 பெண் துறவிகள் கற்பழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் போலிச்சாமியார்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. சாமியார் என்ற போர்வையில் சிலர் பெண்களிடம் சில்மிஷம் செய்வது, பாலியல் தொந்தரவு கொடுப்பது, பலாத்காரம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில் பீகார் மாநிலம் நவடா மாவட்டம் தாலி மோர் என்ற இடத்தில் சாந்த் குதிர் ஆசிரமத்தின் தலைவரும், சாமியாருமான தபஸ்யானந்தும், அவருடைய ஆட்கள் 12 பேரும் அசிரமத்தில் சங்கியிருந்த 3 பெண் துறவிகளை கூட்டாக கற்பழித்துள்ளனர்.
இதனையடுத்து 3 பெண் துறவிகளும் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, போலீஸார் 13 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். பின் 3 துறவிகளையும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சாமியார் தபஸ்யானந்தை தேடிச்சென்றபோது, அவரும், அவருடைய ஆட்களும் தலைமறைவானது தெரிய வந்தது. இதையடுத்து, ஆசிரமத்துக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டது. அந்த சாமியார் மீது ஏற்கனவே பல கற்பழிப்பு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. போலீஸார் தலைமறைவாக உள்ள போலி சாமியார் தபஸ்யானந் உட்பட அவனது ஆட்கள் 12 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.