வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அனைத்து பெருமாள் கோவில்களிலும் கடந்த 10 நாட்களாக சொர்க்க வாசல் திறந்த நிலையில் திருப்பதியில் கடந்த 10 நாட்களில் சுமார் 4 லட்சம் பேர் சொர்க்க வாசலில் சென்று தரிசனம் செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறந்த நிலையில் பத்து நாட்களில் சுமார் 3 லட்சத்து 79 ஆயிரம் பேர் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
மேலும் இந்த பத்து நாட்களில் 15 லட்சத்து 40 ஆயிரம் லட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் 26 கோடியே 60 லட்ச ரூபாய் காணிக்கை உண்டியல் மூலம் கிடைத்துள்ளதாகவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது
கொரோனா வைரஸ் பரவல் நேரத்திலும் பத்து நாட்களில் சுமார் 4 லட்சம் பேர் சொர்க்க வாசல் தரிசனம் செய்ய வந்திருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.