Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி மருத்துவமனையில் பணிபுரியும் 29 பேருக்குக் கொரோனா! அதிர்ச்சியளிக்கும் தகவல்!

Webdunia
திங்கள், 27 ஏப்ரல் 2020 (14:47 IST)
டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனா வார்டில் பணிபுரிந்த 29 பேருக்குக் கோவிட் 19 தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25000 ஐ தொட்டுள்ளது. பரவலைத் தடுக்க கடந்த 32 நாட்களாக ஊரடங்கு அறுவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் நாளுக்கு நாள் புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டு வருகின்றன. இந்த கொரொனாவுக்கு எதிரான போராட்டத்தில் மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் முன்னிலையில் நின்று போராடி வருகின்றனர்.

ஆனால் கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கும் ஆங்காங்கே இந்த வைரஸ் தாக்குதல் பரவி வருகிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் உள்ள ஆறாவது செக்டரில் மெட்ரோ ஸ்டேஷன் அருகே பகவான் மகாவீர் மார்க்கில் அமைந்துள்ள டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இப்போது  அந்த மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், துறை மருத்துவர்கள் மற்றும் பிற ஊழியர்கள் உட்பட 29 சுகாதாரப் பணியாளர்களுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை இவ்வாறு தேசிய உயிரியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுவரை டெல்லியில் 2625 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 54 பேர் இறந்துள்ளனர். இந்திய மாநிலங்களில் அதிக பாதிப்பைக் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் டெல்லி 2 ஆவது இடத்தில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உண்டியலில் விழுந்த பக்தரின் ஐபோனை திருப்பி வழங்க நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு

நெல்லை நீதிமன்றம் முன் நடந்த இளைஞர் கொலை.. 5 பேர் கைது..!

இறங்கிய வேகத்தில் ஏறும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 480 ரூபாய் உயர்வு..!

கேரள கழிவு விவகாரம் எதிரொலி; குப்பை கொட்டுபவர்கள் மீது அடுத்தடுத்து வழக்குப்பதிவு!

வயநாடு இடைத்தேர்தல்: பிரியங்கா காந்தி வெற்றியை எதிர்த்து பாஜக வேட்பாளர் வழக்கு..!

அடுத்த கட்டுரையில்
Show comments