Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரே டிவிட்டில் 26 சிறுமிகளின் வாழ்க்கையை காப்பாற்றிய நபர்!

Advertiesment
ஒரே டிவிட்டில் 26 சிறுமிகளின் வாழ்க்கையை காப்பாற்றிய நபர்!
, சனி, 7 ஜூலை 2018 (14:32 IST)
ரயில் பயணி ஒருவர் தனது ஒரே டிவிட்டால் 26 சிறுமிகளின் வாழ்ழ்கையை காப்பாற்றியுள்ள சம்பவம் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிகளை காப்பாற்றிய அந்த நபரை பலரும் பாராட்டி வருகின்றனர். 
 
கடந்த 5 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. முசாபர்நகர் - பந்த்ரா நடுவேயான அவாத் எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ் 5 கோச்சில் பயணித்த ஒருவர், அதே ரயில் பெட்டியில் 25 சிறுமிகள் அழுதுக்கொண்டிருப்பதை பார்த்து, நிலைமை சரி இல்லாததை உணர்ந்தார்.
 
உடனே, தனது டிவிட்டர் கணக்கில் இருந்து ரயில்வே அமைச்சருக்கான டிவிட்டர் ஐடி, அத்துறை அமைச்சரான பியூஷ் கோயலின் தனிப்பட்ட ஐடி, பிரதமர் மோடியின் டிவிட்டர் ஐடி, ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்கா உள்ளிட்டோரை மென்ஷன் செய்து, பின்வருமாறு பதிவு செய்தார். 
 
நான் அவாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் எஸ் 5 கோச்சில் பயணித்துக்கொண்டுள்ளேன். இந்த கோச்சில் சுமார் 25 சிறுமிகள் உள்ளனர். அனைவருமே பாதுகாப்பற்ற சூழலில் உள்ளதாக தெரிகிறது. சிலர் அழுது கொண்டுள்ளனர். இது ஆள் கடத்தல் போல தென்படுகிறது. இவர்களுக்கு உதவுங்கள் என்று பதிவிட்டார். 
 
இந்த டிவிட் வெளியான சில நிமிடங்களில் ஜிஆர்பி படையினர் ரயில் பெட்டியில் சோதனை நடத்தி உள்ளனர். அதன்படி அந்த நபர் கூறியது போல, அந்த சிறுமிகள் கடத்தப்பட்டுள்ளனர். 
 
சிறுமிகள் தற்போது குழந்தைகள் நல கமிட்டியிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் கொடுக்கபப்ட்டுள்ளது. சிறுமிகள் அனைவரின் வயதுமே 10 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்களாகும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர்கள் சமூக அக்கறையுடன் செயல்படவேண்டும் - விஜய்க்கு ஜெயக்குமார் அறிவுரை