Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

4.5 மணி நேரத்தில் சுரங்கபாதை அமைத்து ரயில் இயக்கம்: இந்தியாவில்தான் இத்தனை வேகம்!

4.5 மணி நேரத்தில் சுரங்கபாதை அமைத்து ரயில் இயக்கம்: இந்தியாவில்தான் இத்தனை வேகம்!
, வெள்ளி, 6 ஜூலை 2018 (16:07 IST)
இந்திய பொறியாளர்கள் மிகவும் பரபரப்பாக இருக்கும் ரயில்பாதையில் 4.5 மனி நேரத்தில் சுரங்கபாதை அமைத்து பின்னர் மீண்டும் ரயிலை இயக்கியது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டிணம் அருகே கொட்டவல்சா மற்றும் பெந்திருத்தி இடையே எண் 484 ரயில்வே இருப்புப்பாதை செல்கிறது. இங்கு நான்கு இருப்புப்பாதை செல்வதால், எப்போதும் ரயில்கள் வந்து செல்லும் பரபரப்பான வழித்தடமாகும். 
 
இதனால், இப்பகுதி மக்கள் ரயில்வே இருப்புப்பாதையை கடக்க முடியாமல், அவதிப்படுவதும், ரயிலில் அடிபட்டு பலியாவதும் அதிக அளவில் நடந்துவந்தது. இதனால், இங்கு சுரங்கபாதை அமைக்க 2017 ஆம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 
 
இந்நிலையில், இந்த சுரங்கபாதை அமைக்க ரயில்வே அதிகாரிகள் முடிவு செய்து, 4.5 மணி நேரத்தில் சுரங்கப்பாதையை ரயில்வே பொறியாளர்கள் உருவாக்கினர். 
 
சுரங்கப்பாதை அமைக்க, தொடங்கப்பட்ட பணி அடுத்த சில மணிநேரத்தில் முடிந்து மீண்டும் ரயில் இயக்கப்பட்டதை பார்த்து அப்பகுதி மக்கள் வியந்துவிட்டனர். இவர்களின் வேலையை அனைவரும் பாராட்டி வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மெஸ்ஸி, ரொனால்டோவுக்கு ஏமாற்றம்; வைரலான நெய்மர், நாக்அவுட்டில் நடந்தது என்ன?